அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 01-12-2025
Live Starts From 5.00a.m Onwards
அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
30-11-2025
Live Starts From 6.00pm Onwards
அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
30-11-2025
Live Starts From 9.00am Onwards
கும்பாபிஷேக அழைப்பிதழ் நிகழ்ச்சி தகவல்களைக்காண இங்கே கிளிக் செய்யவும் PDF
அன்புடையீர்,
ஆகமங்கள், வேதங்கள், சாஸ்த்திரங்கள், திருமறைகளில் முன்தொழும் தெய்வமாகவும், ஞானத்தின் பிரமாணமாகவும், அருள்புரிவதில் அளவற்றவனாகவும், மூலாதார சக்தியாகவும் விளங்குகின்ற விநாயக பெருமான், நமது மூலச்சத்திரம் பகுதியில், அறிஞர் அண்ணா நகரில் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் என்ற பெயருடன், பன்நெடுங்காலமாய் அருள்புரிந்து வருகின்றார். பலரும் கூறுவதை கண்ணுரும் போது இந்த விநாயகரையே இப்பகுதியில் முதன் முதலாக வழிபாடு செய்து வணங்கி வந்திருந்தினர் என்பதை அறியலாம். 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்ற வாக்கியத்தினை மெய்பிக்க, கண்கூடாய் காட்சியளிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகரை மெய் மறந்து, பொய் மறந்து, உண்மையாய் வேண்டுவோரின் வேண்டுதலை நிறைவேற்றி, பக்தர்தம் நெஞ்சத்திலே நீங்காமல் குடியிருக்கும் தனித்துவம் மிக்க இறைவனாய் அறிகின்றோம். இவ்வுளவு சிறப்பு வாய்ந்த மூலவரான ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கும் கும் மற்றும் ஸ்ரீ அபீதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்க்காம்பிகை, ஸ்ரீ காலபைரவர், நவக்கிரகஹங்கள் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கும், ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பரிபூரண அனுக்கிரஹத்தினாலேயும், பக்தர்களின் பங்களிப்புடனும் அழகான புதிய கட்டுமான பணிகள் செய்யப்பட்டு நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி 01.12.2025 திங்கள்கிழமை ஏகாதசி திதி ரேவதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள்ளாக விருச்சிகலக்னத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு இறையருள் பெறுவதோடு கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருளுதவி மற்றும் நிதியுதவியும் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள்
Sri Varasidhi Vinayagar Temple Location
.gif)
